குடித்த ஜூஸுக்கு காசு கேட்டதால் நடுரோட்டில் இழுத்து போட்டு கத்திக்குத்து.. கஞ்சா வெறியர்களின் வெறிச்செயல்

x

ஆரணி அருகே ஜீஸ் குடித்ததற்கு பணம் கேட்ட பழக்கடை உரிமையாளரை கஞ்சா கும்பல் சரமாரியாக தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே டேல்கேட்டில் செல்வம் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். அங்கு கஞ்சா போதையில் வந்த கும்பலை சேர்ந்த 5பேர் ஜூஸ் குடித்துள்ளனர். அதற்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் கடை ஊழியர்களை தாக்கியுள்ளது. இதை தட்டி கேட்ட கடை உரிமையாளர் செல்வத்தை அக்கும்பல்கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன்ர். தப்பியோடிய கஞ்சா கும்பலை சிசிடிவி பதிவை ஆய்வு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்