"தமிழக மாணவர்களுக்கு வர இருக்கும் பாதிப்பு"பாமக நிறுவனரின் வலியுறுத்தல்.மருத்துவ மாணவர்களின் நிலைமை?

x

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில்,

கடுமையான விதிகளை தளர்த்தி தமிழக

மாணவர்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே முதுநிலை படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என அரசு அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது, தமிழக மாணவர்களுக்கு நன்மை செய்வதைப் போலத் தோன்றினாலும், ஒரு பிரிவு தமிழக மாணவர்களை இது கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளார். அந்த விதியை, தமிழ்நாட்டு கல்லூரிகளில் படித்த மாணவர்கள் என்பதற்கு மாற்றாக, தமிழ்நாட்டு மாணவர்கள் என்று மாற்றினால் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அந்த விதியைத் தளர்த்தி பிற மாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்த தமிழ்நாட்டு மாணவர்களும் தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவம் பயில தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்