'விடுதலை-2' படத்திற்கு தயாரான சூரி... "குமரேசன் ரெடி" என வீடியோவை பகிர்ந்து மகிழ்ச்சி

x

குமரேசன் ரெடி என சூரி பகிர்ந்த வீடியோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை முதல் பாகம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதில் குமரேசன் கதாபாத்திரத்தில் காவலராக சூரியின் நடிப்பு அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தன.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெரும்பகுதி படமாக்கப்பட்ட நிலையில், எஞ்சிய காட்சிகளின் படப்பிடிப்பு சிறுமலையில் தொடங்கியதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்புக்கு தான் தயாராகிவிட்டதாகவும் வீடியோவை பகிர்ந்து சூரி மகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்