"தமிழர்கள் உலகின் எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரத்துடன் இருப்பர்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள் என, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
x

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் சிவில் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 44 பேர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

முன்னதாக, சென்னை ஆளுநர் மாளிகையை சுற்றிப் பார்த்தவர்கள், தமிழக ஆளுநர் ரவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் கலந்துரையாடிய ஆளுநர் ரவி, இந்தியா தான் பாரதம் என்பதை முன்னெடுத்தது என்றும், இந்தியா தான் பாரதம் -பாரதம் தான் இந்தியா என்றார். தமிழ் மொழியை கற்று கொள்ள முயற்சி செய்து வருவதாகவும், இது சிறப்பான இடம், இங்குள்ள மக்கள் சிறப்பானவர்கள் என தெரிவித்துள்ளார். தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்