"ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசியல் பற்றிய புரிதல் இல்லை" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

x

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை என, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாரதிய இலக்கிய சங்கம் மற்றும் பாமக கட்சி சார்பாக 4 நாட்கள், கிராமிய திருவிழா நடைபெறுகிறது.

இதனை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குதிரை ரேக்ளா வண்டியில் பயணித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ஆளுநர் அரசியலில் ஈடுபட கூடாது என்றும், தமிழக அரசின் நிர்வாகத்தை ஆளுநர் கண்காணிக்கலாம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்