"மாதத்தின் முதல் வேலை நாளில் அரசு ஊழியர்கள் இதை செய்ய வேண்டும்..." - புதுவை அரசு உத்தரவு

புதுச்சேரி அரசு ஊழியர்களை மாதத்தின் முதல் வேலைநாளில், காதி அல்லது கைத்தறி ஆடை அணிய வேண்டும் என, அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஹிரண் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில், அரசு ஊழியர்கள் பாரம்பரிய காதி அல்லது கைத்தறி துணி அணியலாம் என, துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மாதந்தோறும் 15-ஆம் தேதியன்று, அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

X

Thanthi TV
www.thanthitv.com