ரூ.3,300 கோடி முதலீடு செய்யும் ஆல்ஃபாபெட்... சாட் ஜி.பி.டிக்கு போட்டியாக களம் இறங்கும் கூகுள்

x

உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான ஆல்ஃபாபட் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் தேடு எந்திரத்தை தினமும் பல நூறு கோடி பேர் உலகெங்கும் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழிநுட்ப துறையில் ஈடுப்பட்டுள்ள ஸ்டார்டப் நிறுவனமான ஆன்த்ரோபிக் நிறுவனத்தில் 40 கோடி அமெரிக்க டாலர்களை ஆல்ஃபாபெட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 3 ஆயிரத்து 300 கோடி ரூபாயாகும்.

சாட் ஜி.பி.டி என்ற சாட் பாட்டை உருவாக்கி, செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் திருப்பு முனையை உருவாக்கியுள ஓபன் எ.ஐ நிறுவனத்துடன் கடும் போட்டியில் ஆன்த்ரோபிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தேடு எந்திரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்த கட்டத்திற்கு இதை எடுத்துச் செல்ல, ஆல்ஃபாபட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக ஆல்ஃபாபட் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்