"கேங்மேன் பணி தேர்வு என்னமோ தமிழர்களுக்குத்தான்" - "ஆனா மொத்தமும் அவங்கதான்.." குமுறும் தமிழர்கள்..

"கேங்மேன் பணி தேர்வு என்னமோ தமிழர்களுக்குத்தான்" - "ஆனா மொத்தமும் அவங்கதான்.." குமுறும் தமிழர்கள்..
Published on

ஆவடியில் நடைபெற்ற ரயில்வே உடல் தகுதி தேர்வில் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பங்கேற்றதாகவும், 4 ஆயிரத்து 500 பேரில், 500க்கு குறைவாகவே தமிழர்கள் இருப்பதாக தமிழ்நாட்டு இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரயில்வே துறையில் 1 லட்சம் கேங்மேன் பணிகளுக்காக 2019ம் ஆண்டு இதற்கான விண்ணப்பம் வழங்க பட்டது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு 2022ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது.

இதில் தேர்வானவர்களுக்கு 2-ம் கட்ட தேர்வான உடல் தகுதி தேர்வு, நாடு முழுவதும் 19ம் தேதி முதல் நாளை 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாட்டிற்கான ஒரே தேர்வு மையம் ஆவடியில் நடைபெற்றது.

இதில் பங்குபெற பீகார்,ஒடிசா, உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநில இளைஞர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒவவொரு நாளும் அதிகாலையில் ஆவடிக்கு வந்து குவிந்துள்ளனர்.

4 ஆயிரத்து 500 பேரில், 500க்கு குறைவாகவே தமிழர்கள் இருப்பதாக தமிழ்நாட்டு இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com