விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை - முடங்கிய மீன் பிடி தொழில் | nagapattinam | rainupdates

x

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை - முடங்கிய மீன் பிடி தொழில்

நாகையில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாகையில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. நேற்றிரவு 10 மணி அளவில் துவங்கிய மழையானது நாகை நாகூர் வேளாங்கண்ணி சிக்கல் கீழ்வேளூர் கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை வரையில் இடியுடன் கூடிய மழை பெய்தது. நாகை மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை


Next Story

மேலும் செய்திகள்