மருத்துவ கலந்தாய்வு முழு விவரம்.. நீட்-ல் எவ்வளவு எடுத்திருக்க வேண்டும்?- வந்த அதிரடி அறிவிப்பு...

x

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

நடப்பு ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு வரும் 25ம் தேதி காலை 10 மணி முதல் 31ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் ஆன்லைன் பதிவு, கலந்தாய்வு கட்டணம் செலுத்துதல், விருப்பமான கல்லூரிகளை பதிவு செய்தல் போன்ற பணிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். நீட் தேர்வில் 720 முதல் 107 மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்க முடியும். ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் சீட் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்று ஆகஸ்ட் 3ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு ஆணைகளை ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 8ம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து, ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டுமென, மாணவர் சேர்க்கை செயலாளர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்