எம்ஜிஆர், சிவாஜி முதல் வடிவேலு வரை.. திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு

x

எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்.

அவருக்கு வயது 91. சிவாஜி கணேசனின் பாசமலர், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை உள்ளிட்ட படங்களுக்கும், எம்ஜிஆரின் தாய் சொல்லை தட்டாதே, அன்பே வா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களுக்கும் ஆரூர்தாஸ் வசனம் எழுதியுள்ளார்.

முதுமை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஆரூர்தாஸ், சென்னை தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று மாலை 6.40 மணிக்கு உயிரிழந்த ஆரூர்தாஸின் உடல், மந்தைவெளி கல்லறை தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்