வாங்கிய 8 மாதத்தில் வெடித்த ஃபிரிட்ஜ்.. ஸ்டெபிலைசர் வாங்காதது தான் காரணமா? - சென்னை எக்மோரில் பயங்கரம்

x
  • சென்னையில் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து.
  • பிரிட்ஜ் வாங்கி 8 மாதங்களே ஆன நிலையில் வெடித்து தீவிபத்து.
  • சென்னை எழும்பூர் கெங்கு ரெட்டி சாலையில் அமைந்துள்ள வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருபவர் அரவிந்த் குமார்.
  • அரசுக்கு சொந்தமான கைத்தறி கடையில் ஊழியராக பணியாற்றி வரும் அரவிந்த் குமாருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
  • கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரவிந்த்குமார் 16 ஆயிரம் ரூபாய் கொடுத்து புதிய பிரிட்ஜ் ஒன்றை வாங்கி உள்ளார்.
  • இன்று காலை இரண்டு மகன்களையும் பள்ளியில் விட்டு அரவிந்த் குமார் மற்றும் அவரது மனைவி பணிக்கு சென்றுள்ளனர்.
  • இந்த நிலையில் இன்று காலை 11.30மணியளவில் கீழ்தளத்தில் வசித்து வரும் அரவிந்த் குமாரின் உறவினர் அவருக்கு போன் செய்து உனது வீட்டில் தீப்பிடித்து எரிவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
  • மேலும் தீயணைப்பு துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் எழும்பூர் தீயணைப்பு வீரர்கள் அரவிந்த்குமாரின் வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரிட்ஜ் தீப்பிடித்து எரிவது தெரியவந்ததையடுத்து நீரை பாய்ச்சி உடனடியாக தீயை அணைத்தனர்.
  • பிரிட்ஜ் முழுவதும் கருகிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
  • இந்த தீவிபத்து குறித்து எழும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரிட்ஜ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகக்கின்றனர்.
  • கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 16 ஆயிரம் ரூபாய் கொடுத்து வேர்பூல் நிறுவனத்தில் பிரிட்ஜ் வாங்கியதாகவும், ஷோரூமில் ஸ்டெபிலைசர் தேவையில்லை என கூறியதால் ஸ்டெபிலைசர் வாங்கவில்லை என அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்