கோயில்களில் இலவச திருமணம்... திட்ட செலவினத் தொகை உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

x
  • இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்ட செலவினத்தொகை 20 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பில் 283 ஏழை எளிய இணைகளுக்கு கோயில் மூலம் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
  • இதன் மூலம் இந்த இலவச திருமணங்களை நடத்துவதற்கான திட்ட செலவினத் தொகை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
  • திருமாங்கல்யத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும், மணமகன் ஆடைக்கு ஆயிரம் ரூபாயும், மணமகள் ஆடை மற்றும் மொத்த உணவுக்கு தலா 2 ஆயிரம் ரூபாயும், மாலை, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது...
  • கோயில்களில் இலவச திருமணம் நடத்தி வைப்பதற்கு உபயதாரர்கள் கிடைக்காத நிலையில், கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்