பூங்காவில் பூத்துக்குழுங்கும் பூக்கள்.. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - இயற்கையின் கண் கவரும் காட்சிகள்

x

கொடைக்கானலில் நகரின் மைய பகுதியில் உள்ள பிரையண்ட் பூங்காவில், இந்த மாதத்தின் இறுதியில் 60-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக நடப்பட்ட லட்சக்கணக்கான செடிகளில், பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன. இதனையடுத்து பூங்காவில் பூத்து குலுங்கும் பூக்களின் பெயர் மற்றும் அதன் தாவரவியல் பெயர், எந்த குடும்ப வகைகளை சேர்ந்தவை என்பதை சுற்றுலாப் பயணிகள் எளிதில் அறியும் வண்ணமாக, பூக்களின் அருகில் பூக்கள் பெயர் அச்சிடப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலையில், கியூஆர் கோடை, பூங்கா நிர்வாகத்தினர் அறிமுகப்ப‌டுத்தியுள்ளனர். தற்போது விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். அவர்கள், பூக்களை ரசிப்பதுடன், செல்போன்களில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து, பூக்களின் விவரங்களை அறிந்து கொள்கின்றனர். எளிதாக தகவல்களை பெற முடிவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்