"சிங்கப்பெண்ணே..சிங்கப்பெண்ணே..!" 94 வயதான இந்திய பாட்டியின் சாதனை

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் 94 வயது மூதாட்டி ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
x

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் 94 வயது மூதாட்டி ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் இந்தியா சார்பில் 94 வயது மூதாட்டி ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். பின்லாந்தின் டெம்பேர் நகரில் சர்வதேச மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் ஹரியானாவில் இருந்து 94 வயதான பஹ்வானி தேவி பங்கேற்றார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், 24 புள்ளி 74 நொடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்திய அவர், குண்டெறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்றார். அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 3 தங்கம் வென்றதன் மூலம் சர்வதேச போட்டிக்கு பஹ்வானி தேவி தேர்வானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்