கிராம உதவியாளர்கள் பணி- இறுதி பட்டியல் வெளியீடு - சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வலியுறுத்தல்

x

கிராம உதவியாளர்கள் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட இறுதி பட்டியலில் அதிகளவு திமுகவினரே இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதன்படி பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டார்.

அப்போது தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் தலையீடு இல்லாமல் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து பொறுப்பை ஒப்படைத்த மாவட்ட ஆட்சியரை, அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் தாலுகா அலுவலக ஊழியர்களின் வாரிசுகள் மற்றும் திமுகவினரின் வாரிசுகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள், அதற்கு சான்றாக திமுக நிர்வாகி சிவபத்மநாபனின் சர்ச்சைக்குரிய ​பேச்சை சுட்டிக்காட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்