அரசு மாதிரி பள்ளியில் படிக்க கட்டணமா?.. ஒரே கேள்வி விதவிதமான பதில்கள்.. தீயாய் பரவும் 3 அதிகாரிகளின் ஆடியோக்கள்

x

குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் மாறுபட்ட கருத்து கூறிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆங்கிலவழி கல்விக்கு, 6 ஆயிரம் ரூபாய் வரையிலும், தமிழ்வழி கல்விக்கு 800 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து, குத்தாலத்தை சேர்ந்த சண்முகம் என்பவர், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது, கட்டணம் உள்ளது என்று ஒரு அதிகாரியும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வசூலிக்கலாம் என்று மற்றொரு அதிகாரியும், கட்டணம் கிடையாது தலைமை ஆசிரியரிடம் விசாரிக்கிறேன் என்று ஒரு அதிகாரியும் கூறியுள்ளார். இந்த ஆடியோக்களை சமூக வலைத்தளங்களில் சண்முகம் வெளியிட்டுள்ளார். அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களால் அரசுப் பள்ளியில் கல்விக் கட்டணம் உள்ளதா? இல்லையா? என்ற குழப்பம் குத்தாலம் பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்