மகன் குத்தி கொலை...அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

x

மகன் குத்தி கொலை...அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு


ஒசூர் அருகே மகன் கொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சியில் தந்தையும் இறந்து போன சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்னயப்பா. இவரை, தம்பி மருமகள் மது தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையறிந்த அன்னய்யாவின் மகன் சென்னப்பா மதுவிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுவின் கணவர் விஜய், தனது பெரியப்பா மகனான சென்னப்பாவை கத்தியால் சரமாரியாக குத்தியதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னப்பா இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்து

அதிர்ச்சி அடைந்த சென்னப்பாவின் தந்தை அன்னய்யா துக்கம் தாங்காமல் இறந்து போனார். இருவரின் உடல்களை கண்டு உறவினர்கள் கண்கலங்கினர். இதனிடைய தப்பியோடிய கொலையாளி விஜய் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்