காசி அகோரியாக மாறிய பிரபல ரவுடி...10 வருடங்களுக்கு பிறகு அதிரடி கைது...

காசி அகோரியாக மாறிய பிரபல ரவுடி...10 வருடங்களுக்கு பிறகு அதிரடி கைது...
x

நாமக்கல் - பள்ளிபாளையம்

காசி அகோரியாக மாறிய பிரபல ரவுடி...

10 வருடங்களுக்கு பிறகு அதிரடி கைது...

பெயரை மாற்றி கொண்டு அகோரி வேஷம்...

காசியிலிருந்த் ஊர் திரும்பிய ரவுடி கைது...

நிஜம் எப்பவும் கற்பனைய விடவும் பயங்கரமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்னு சொல்லுவாங்க. அந்த ஸ்டேட்மென்ட, அகோரி வேஷம் போட்ட கொலை குற்றவாளி 10 வருஷத்துக்கு அப்புறம் கைது செய்யப்பட்டிருக்கிற இந்த சம்பவம் உறுதி செஞ்சிருக்கு

திரும்புற திசையெல்லாம் ஞானியும் காவியும் மனச சாந்த படுத்தினாலும்... காசில இருக்ககூடிய அகோரிகளையும் மணிகர்னிகா படித்துறையும் நினைத்தாலே ஒருவித பதைபதைப்பு நிச்சயமா இருக்கும்.

ஒருகாலத்துல வாழ்க்கைய துறந்து காசிக்கு வர்றவங்களுக்கு அது ஒரு வழி பாதையா மட்டும்தான் இருந்தது... ஆனா இப்போ ஆன்மீக வாதிகள்ங்குற போர்வையில கொடூர குற்றம் புரிந்த குற்றவாளில் இங்க ஏராளமா மறைஞ்சி கிடக்குறாங்க. அப்படி சாமியார் போர்வையில இருந்த ஒரு குற்றவாளியை தான் போலீசார் இப்போ கைது பண்ணியிருக்காங்க.

அவரோட பேரு முஸ்தபா என்கிற முகமது ஜிகாத். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி... இவர்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல குற்றவழக்குகள் குவிஞ்சிருக்கு. தமிழ்நாடு முழுக்க கூலிப்படையா செயல்பட்டு தரமான சம்பவங்கள் செஞ்சிருக்கறதாவும் சொல்லப்படுது...

இந்த நிலையிலதான் தன் மேல இருந்த கொலை கேஸ்ல இருந்து தப்பிக்குறதுக்காக பத்து வருஷம் காசியில் தலைமறைவாகியிருக்காரு... செஞ்ச பாவத்தை எல்லாம் கங்கையில நிதானமா கரைச்சவரு தன்னோட பேரையும் ஜிக்லினத் அகோரின்னு மாத்திருக்காரு...

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுனு சொல்றமாதிரி பழைய வாழ்க்கைய தேடி நடை பயணமாவே திரும்ப வந்தவரதான் காவல்துறை இப்டி ஓரங்கட்டி விசாரிச்சுருக்காங்க... போலீஸ் தன்மேல தொடர்ச்சியா பல வழக்குகள் போட்டதால நிம்மதிய தேடி காசில தலைமறைவானதா வாக்குமூலம் கொடுத்துருக்காரு..

அதோடு தன் மேல எந்தெந்த காவல் நிலையத்துல வழக்குகள் இருக்குதுன்னுகூட இப்போ அவருக்கு சரியா நியாபகத்துல இல்ல...

ஒருவேள கங்கையில பாவத்த கரைக்கும்போது பழைய நினைவுகளையும் சேர்த்தே கரைச்சிட்டாரோன்னு சந்தேகம் எழுந்திருக்கு...


முஸ்தப்பாவ நிக்கவச்சி போட்டோ எடுத்துகிட்ட போலீஸ் அதை மத்த காவல் நிலையங்களுக்கும் அனுப்பி பழைய வழக்குகள மறுபடியும் தோண்ட ஆரமிச்சுருக்காங்க... அதோடு , இந்த பத்து வருஷம் உண்மையிலயே முஸ்தபா காசிலதான் இருந்தாரா ? அங்கு ஏதாவது குற்றசம்பவங்கள்ள ஈடுப்பட்டுருக்காரா ? வாழ்க்கைய வெறுத்து காசிக்கு போனவரு திரும்ப வந்ததற்கான காரணம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கான விடை விசாரணையின் முடிவுலதான் தெரியவரும்...


Next Story

மேலும் செய்திகள்