அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பொய்யான போக்சோ புகார்.. மாணவிகளை தூண்டிய தலைமை ஆசிரியர்

x

மதுரையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது பொய்யாக போக்சோ வழக்குப்பதிவு செய்ய தூண்டிய தலைமை ஆசிரியர் மீது போக்சோவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மற்றும் ஊமச்சிகுளம் மகளிர் காவல்நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி புகார் ஒன்று வந்தது. அதில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அத்துமீறுவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் தெரிவித்திருந்தார். உடனடியாக விசாரணையில் இறங்கிய நிலையில் முதற்கட்ட நடவடிக்கையாக 3 ஆசிரியர்கள் மீது கருப்பாயூரணி காவல் நிலையத்தில் போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே பெண் ஆசிரியர் ஒருவர் தென்மண்டல ஐஜியிடம் ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதத்தில் பொய் புகார் அளித்துள்ளதாக மனு அளித்தார். இதன்பேரில் தென்மண்டல ஐஜி உத்தரவின்படி பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிகள் உள்ளிட்டோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் யாரும் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என தெரிவித்தனர். அப்போது தான் நடந்த இந்த சம்பவம் பொய் என்றும் தனிப்பட்ட விரோதத்தில் தலைமை ஆசிரியர் இதுபோல் நடந்து கொண்டதும் உறுதியானது. மாணவிகளை தூண்டிவிட்டு புகார் அளிக்க வைத்ததாக தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என தென்மண்டல ஐஜி தெரிவித்துள்ளார். இதுபோல் போக்சோ வழக்கில் சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்