முதல்வர் செல்லும் பாதையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ. பிடிபட்டார்

x

முதல்வர் ஸ்டாலின் செல்லும் பாதையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் போலீஸ் எஸ்.ஐ உடையணிந்த நபர் ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த நபர் ஒருவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்நபர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும் தற்போது கருமத்தம்பட்டியில் தங்கி ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிவதும் தெரிய வந்தது.

மேலும், பல நாள்களாக இவ்வாறு போலீஸ் உடையணிந்து, மக்களை ஏமாற்றி பணம் பறித்ததும் கண்டறியப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை திருப்பூருக்கு சாலை மார்க்கமாக சென்ற சமயத்தில், அதே சாலையில் போலி எஸ்.ஐ ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்