மூட்டை மூட்டையாக வெடி பொருட்கள்...பதுக்கி வைத்திருந்த நபர் - வேலூரில் பரபரப்பு | Vellore | Bomb

x

அணைக்கட்டை அடுத்த ஒடுகத்தூர் அருகே உள்ள மடையாப்பட்டு கிராமத்தை சேர்ந்தபாண்டு என்பவரின் நிலத்தில் கிணறு வெட்டும் போது பாறைகளை பிளக்க பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து

அங்கு விரைந்த போலீசார் அனுமதி இல்லாமல் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2100 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 750 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை பதுக்கி வைத்து பயன்படுத்திய சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வெடிபொருட்களை விற்ற பத்மநாபன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்