"தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செலவு கணக்கு" - நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

x

ஆளுநர் மாளிகை செலவு செய்த 11 கோடியே 32 லட்சம் ரூபாய்க்கான விவரங்கள் எதுவும் அரசுக்கு வழங்கப்படவில்லை என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆளுநருக்கு செயலகம், வீட்டு செலவு உள்ளிட்ட 3 வகைகளில் அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது என்றும், 2 கோடியே 41 லட்சமாக இருந்த நிதி ஒதுக்கீடை இந்த ஆண்டு மூன்று கோடியே 60 லட்சமாக முதலமைச்சர் உயர்த்தியிருப்பதாக கூறியுள்ளார். ஆளுநருக்கு ஒதுக்கப்படும் 5 கோடி ரூபாயில், தொடர்ந்து விதிமீறல் நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார். அட்சய பாத்திரா என்ற பெயரில் 5 கோடி அனுப்பப்பட்ட நிலையில், அந்த 5 கோடி அட்சய பாத்திரா திட்டத்திற்கு செல்லவில்லை என தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகைக்கு இதுவரை மொத்தமாக செலவிடப்பட்டிருப்பது 18 கோடி ரூபாய் என்றும், அதில் 11 கோடி ரூபாய் எங்கே செலவிடப்பட்டது என்ற விவரம் அரசுக்கு தெரியாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகரஜான் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்