5 முறை தொடர் தோல்வி... "அறிவியலில் பாஸ் பண்ணாமல் விடமாட்டேன்"84 வயதில் பள்ளி செல்லும் 'சிறுவன்'...

இங்கிலாந்தில் 84 வயது முதியவர் ஒருவர், பள்ளி பருவத்தில் தோல்வி அடைந்த அறிவியல் பாடத்தில், மீண்டும் தேர்ச்சி பெறும் நோக்கத்தோடு தற்போது பள்ளியில் சேர்ந்துள்ளார்.
x

இங்கிலாந்தின் சிசெஸ்டர் நகரை சேர்ந்த எர்னி பபெட் என்பவர் பள்ளியில் படித்தபோது, அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். தொடர்ந்து 5 முறை அந்த தேர்வை எழுதியும் அவரால் வெற்றி பெற முடியாத நிலையில், முயற்சியை கைவிட்டார். தற்போது 84 வயதாகி முதியோர் இல்லத்தில் வசித்து வரும் அவருக்கு சிறுவயதில் தோல்வி அடைந்த அறிவியல் பாடத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், தள்ளாத வயதில் பள்ளிக்கு செல்லும் அவர், இந்த முறை அறிவியல் பாடத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்