யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு - மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

x

வெள்ளியங்கிரி மலைப்பகுதியில், யானை வழித்தடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், நாடு முழுவதும் யானைகள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட யானை வழித்தடங்கள், மத்திய அரசின் உதவியுடன் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், அங்கு ஒலிபரப்பு செய்யப்படும் அதிகளவிலான இசைகள், யானைகளையும், காட்டு உயிரினங்களையும் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய, மத்திய சுற்றுச்சூழல் துறை இணைய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, பாஜக அரசு பொறுபேற்ற பிறகு அதிக அளவிலான சாலை விபத்து நடைபெறுவதில்லை என தெரிவித்தார். மேலும், ரயில் பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்க, சாலைக்கு கீழே வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, வெள்ளியங்கிரி ஆக்கிரமிப்பு மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.


Next Story

மேலும் செய்திகள்