டிடிவி தினகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி

x

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளால், உடல் நலம் பாதிக்கப்பட்ட டிடிவி தினகரன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், தினகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, உணவு ஒவ்வாமையால் தான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்