"பாக்கெட்-ல இருக்குனு சொன்ன நீட் ரத்து ரகசியம் என்ன ஆச்சு..?" - அதிமுக Vs திமுக... அவையில் அனல் பறந்த விவாதம்

x

"பாக்கெட்-ல இருக்குனு சொன்ன நீட் ரத்து ரகசியம் என்ன ஆச்சு..?" - அதிமுக Vs திமுக... அவையில் அனல் பறந்த விவாதம்


சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, தேர்தல் வாக்குறுதிகள் குறித்து திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, (card-1)குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக திமுக அளித்த வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் நேரு, (card-2)கடந்த 2016-இல் பெண்களுக்கு செல்போன் தருவதாக அதிமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.

மீண்டும் பேசிய கே.பி.முனுசாமி, (card-3)அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி வாக்குறுதி கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

(card-4)அதற்கு, 20 லட்சம் பேருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பேரவைத் தலைவர் அப்பாவு பதிலளித்தார்.(card-5)

அப்போது, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் பாக்கெட்டில் இருப்பதாக திமுக கூறியது, அந்த ரகசியம் என்ன ஆனது என்று கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். இதுபோன்று சட்டப் பேரவையில் திமுக-அதிமுக இடையே காரசாரமாக விவாதம் நடந்தது.


Next Story

மேலும் செய்திகள்