சிறையில் இருந்து வெளியே வந்த உடனே மீண்டும் கைதான திமுக நிர்வாகி | Kadayanallur | lottery

x

தென்காசியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்த திமுக நிர்வாகியை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை பகுதியை சேர்ந்தவர் திமுக நிர்வாகி பட்டமுத்து. இவர் சில நாட்களுக்கு முன்பு தான் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக சிறை சென்று வெளியே வந்த நிலையில், மீண்டும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் பட்டமுத்துவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்