திமுக அதிரடி அறிவிப்பு

x

சி.ஆர்.பி.எப் பணிக்கான கணினி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடத்திட வலியுறுத்தி, திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், மாணவர் அணி செயலாளர் எழிலரசனும் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.ஆர்.பி.எப். பணிக்கான தேர்வை இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமான தேர்வாக கட்டமைக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் முயற்சிப்பதாகவும், இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் கருதும் பாசிச பாஜக அரசு, தொடர்ந்து சர்வாதிகார தன்மையோடு செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் தேர்வை நடத்துவதற்கு உடனடியாக மறு அறிவிப்பு வழங்கிட வலியுறுத்தி, வரும் 17 ஆம் தேதி நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்