மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு... போலீசார் கண் முன்னே தாக்கி கொண்ட கொடூரம்...

x

சேலம், ஆட்டையாம்பட்டி அருகே மாமுண்டி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 18 ஆம் தேதி தனது நண்பர்களுடன் காளிப்பட்டியில் மது அருந்தி கொண்டிருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவரும் அவரது நண்பர்களுடன் அங்கு மது அருந்த வந்துள்ளார். அப்போது, இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், மதுபாட்டிலால் சக்திவேலை நவீன்குமார் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சக்திவேலும் அவரது நண்பர்களும் போலீசில் புகாரளிக்க சென்ற நிலையில், அங்கும் நவீன்குமார் தனது நண்பர்களுடன் வந்ததால், காவல்நிலைய வளாகத்தில் வைத்தே இரு தரப்பும் மோதிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், நவீன்குமார், சத்யராஜ், ராஜ்குமார் ஆகிய மூவரை கைது செய்து சிறையிலடைத்த நிலையில், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்