கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு...சாக்குப்பையில் போட்டு மீட்ட தீயணைப்பு துறை

x

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் வசிக்கும் காதர் மீரான் என்பவர், தனது வீட்டில் பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், வீட்டின் மாடியில் உள்ள பயன்படுத்தாத கழிவறையில் பாம்பு இருந்ததை கண்டறிந்தனர்.

5 அடி நீளமுள்ள அந்த பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர், சாக்குப்பையில் போட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்