சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்கி வைப்பதில் திமுக-அதிமுக இடையே தகராறு

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியை தொடங்கி வைப்பதில் திமுக-அதிமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பு ஆண்டிற்கான அரவை பணி இன்று காலை தொடங்கி வைக்கப்பட இருந்தது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பதாக இருந்தது. இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்கூட்டியே சென்றதால் முதலில் யார் அரவை பணியை தொடங்கி வைப்பது என ஏற்பட்ட தகராறில் கைகலப்பு ஏற்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com