கருணாநிதி பெயர் பலகை அழிப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர்... ஓசூரில் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசுப்பள்ளியில், கருணாநிதி பெயர் பலகையை பா.ஜ.க.வினர் கருப்பு மை கொண்டு அழித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு, மாநகராட்சி நிர்வாகம், கருணாநிதி விளையாட்டு திடல் என பெயர் சூட்டி, பெயர் பலகை வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர், பெயர் பலகையை கருப்பு மை ஸ்ப்ரே கொண்டு அழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேயர் சத்யா, எம்.எல்.ஏ. பிரகாஷ் மற்றும் தி.மு.க.வினர், மைதானத்தின் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக பா.ஜ.க.வை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com