கோவில் திருவிழால் டான்ஸ் ஆடி வழிபாடு.. தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

x

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற வீரபத்திர சுவாமி கோவில் திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து குருமன்ஸ் இன மக்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். சில்லாரஹள்ளி, மோளையானூர், மூக்காரெட்டிப்பட்டி, ரேகடஹள்ளி, மோரூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த குருமன்ஸ் இன மக்கள் சில்லாரஹள்ளி கிராமத்தில் ஒன்று கூடி வீரபத்திர சுவாமியை வழிபட்டனர். விழாவில், தங்கள் பாரம்பரிய நடனமாடி பூஜை செய்தும், தலையில் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்