எழும்பூர் ரயில் நிலையத்தில் அலை மோதிய கூட்டம் - கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை

x

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். முன்பதிவில்லா பெட்டிகள் குறைந்த அளவே இருப்பதால், அந்த பெட்டிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் முன்கூட்டியே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்