வங்கிகளில் கோடி கோடியாய் சுருட்டல். சிக்கிய உதவி மேனேஜர் உட்பட 13 பேர்

x

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளில், மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய கடன் வழங்கி மோசடி செய்ததாக, வங்கி உதவி மேலாளர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழ் கோத்தகிரி, குன்னூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில், மத்திய அரசின் கிசான் கேஸ் கிரிடிட் திட்டத்தின் கீழ், விவசாயிகள் 24 பேரின் ஆவணங்களை பெற்று மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பிலான மதிப்பிலான விவசாய கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மூன்று கோடியே 61 லட்சம் ரூபாயை செலுத்திய பிறகு, வங்கி மேலாளர்கள், வனச்சரகர் உள்ளிட்டோர் அந்த தொகையை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில், நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், விவசாயிகளை அழைத்து விசாரணை நடத்திய போது, மோசடி செய்தது அம்பலமானது. இதனிடையே, வங்கியின் உதவி மேலாளர் ஜெயராமன் உள்பட 13 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வங்கி மேலாளர் அனூஜ்குமார், வனத்துறை அதிகாரி கணேசன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்