திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள் | dindugul

x

திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்காததால், ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 1985-ஆம் ஆண்டு, திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு செட்டிநாயக்கன்பட்டியில் 55 விவசாயிகளிடமிருந்து 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு இரண்டரை லட்சம் ரூபாய், 30 சதவீத ஆறுதல் தொகை, 15 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாதல், பாதிக்கப்பட்ட விவசாயிகள், திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட விவசாயிகள், அவர்களின் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்வதற்காக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் லதா சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, இழப்பீட்டுத்தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்