பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு - தீர்ப்பை கேட்டு கதறி அழுத குற்றவாளி | pocso act

x

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 37 வயதான காமராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு வருட கடுங்காவல் சிறை தண்டனை ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சத்யா ஆயுள் தண்டனையும் இரண்டு வருட கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இது தவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். தண்டனை அளித்த பின்னர் குற்றவாளி காமராஜ் கதறி அழுதார்.


Next Story

மேலும் செய்திகள்