டிப்பர் லாரிகளை வழிமறித்து தகராறு.. போலீசார் மீது இளைஞர்கள் தாக்குதல் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு
தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அடவிசாமி புரம் கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியில், நாள்தோறும் ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு, டிப்பர் லாரிகள் சென்று வருகிறது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சு மற்றும் அவரது நண்பர்கள், கல்குவாரிகளுக்கு சென்ற டிப்பர் லாரியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதில், மதுகுமார், முனிராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மேலும், இது குறித்து விசாரிக்க சென்ற, தேன்கனிக்கோட்டை சிறப்பு காவல் உதவியாளர் நாகபூஷணத்தையும் அவர்கள் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், இருதரப்பினரையும் சேர்த்து 6 பேரை கைது செய்துள்ள நிலையில், மேலும் பலரை தேடி வருகின்றனர்.
Next Story
