ராணுவத்தை கிண்டலடித்த நடிகை.. ஆதரவு தெரிவித்து நக்மா பேசியதால் சர்ச்சை | RichaChadha | Nagma | Army

x

இந்திய ராணுவத்தை கிண்டலடித்த பாலிவுட் நடிகைக்கு, ஆதரவாக ராணுவம் அரசியல் ஆதாயம் பார்ப்பதாக நடிகையும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நக்மா கூறி இருப்பது சர்ச்சையாகியுள்ளது.

பாகிஸ்தானின் ராணுவ தலைமை மாற்றப்படுவதை ஒட்டி, பாக்கிஸ்தான், இந்தியா உடனான ராணுவ உறவு குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் வீரத்தை குறிப்பிட்டு ராணுவ தளபதிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அப்படி ஒரு பதிவை டிவிட்டரில் பகிர்ந்த நடிகை ரிச்சா சதா, கிண்டலடித்து கமெண்ட் செய்திருந்தார். 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு எதிராக போரிட்டு 20 வீரர்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தை கிண்டலடித்து ரிச்சா சதா பதிவிட்ட கருத்துக்கு கண்டனங்கள் வலுத்தன. இந்த நிலையில், ரிச்சா சதாக்கு நடிகையும், மும்பையில் காங்கிரஸ் துணை தலைவியுமான நக்மா ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ரிச்சா சதா ராணுவ வீரர்களின் தியாகங்களை இழிவுபடுத்தவில்லை என்றும், தேர்தலில் பாஜகவுக்கு ஆதாயமளிக்கும் வகையில் பணியாற்றும் ஜெனரல் அளித்த அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். ராணுவம் அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுவதாக கூறியுள்ள நக்மாவின் கருத்துக்கு, ராணுவ தரப்பில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்