கிண்டியில் புதிய மருத்துவமனை கட்டட பணிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கிண்டியில் புதிய மருத்துவமனை கட்டட பணிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

சென்னை கிண்டியில், புதிதாக கட்டப்பட்டுவரும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் இந்த பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஆறு லட்சம் சதுர அடியில், ஏழு தளங்களுடன், ஆயிரத்து ஏழு படுக்கை வசதிகளுடன், அமைக்கப்பட்டு வருகின்றது.

இதன் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த முதல்வர், உட்புற கட்டமைப்பு வசதிகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்