கோவையில் இந்து அமைப்புகளிடம் ஆட்சியர் வேண்டுகோள்

x

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத்துகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்து அமைப்புகள் மற்றும் கோயில் அறங்காவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டது. மேலும் அப்போது அதிகாரிகள், கோவையில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டுமென இந்து அமைப்பினரை கேட்டுக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்