வெளியே காபி ஷாப்...உள்ளே Bar...திடீர் ரெய்டால் சிக்கிய ஹூக்கா

x

சென்னை வேப்பேரியில், அனுமதியின்றி ஹூக்கா Bar நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் ஹூக்கா பார் செயல்பட்டு வருவதாக வேப்பேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தியதில், சட்டவிரோதமாக ஹூக்கா பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து பாரில் இருந்த 5 ஜாடி, 10 பைப், 2 கிலோ ஹூக்கா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், Bar மேலாளர் மனிஷ்ஜோஷி என்பவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்