முதல்வர் ஸ்டாலின் - மம்தா இன்று சந்திப்பு | cmstalin | mamtabanerjee

x

முதல்வர் ஸ்டாலின் - மம்தா இன்று சந்திப்பு

சென்னை வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்திக்க உள்ளார்.

மேற்குவங்க ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில், பங்கேற்பதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று மாலை மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது, தேசிய அளவிலான அரசியல் கூட்டணி பற்றி, இரு முதல்வர்களும் விவாதிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்