கோயிலுக்குள் செல்ல இருதரப்பு இடையே மோதல்... தீக்குளிக்க முயன்ற ஒரு தரப்பினர் - ஆட்சியர் உத்தரவு

x

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது, மேல்பாதி காலனி பகுதியை சார்ந்த பட்டியலின மக்கள் உள்ளே நுழைய முயன்ற நிலையில், எதிர்ப்பு தெரிவித்தனர் கிராம மக்கள். ஆனால் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்தை தலித் அமைப்பினர் முற்றுகையிட்டபோது அமைச்சர் பொன்முடி காவல் துறை பாதுகாப்போடு சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில், மேல்பாதி கிராம மக்கள் கோயிலில் சாதி சான்றிதழ், குடும்ப அட்டை போன்ற அரசு ஆவணங்களை ஒப்படைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என போராடினர். அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 2 முறை ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும் தோல்வியில் முடிந்தது. இப்பிரச்சினை 40 நாட்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை இந்த பிரச்சனைக்கு முழு தீர்வை காண முடியவில்லை. பதற்றம் காரணமாக தினமும் மேல்பாதி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஆட்சியர் பழனி பட்டியலின மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்