வாளியில் இருந்த நீரில் விளையாடிய குழந்தை.. எதிர்பாராமல் நடந்த விபரீதம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்

x

வாளியில் இருந்த நீரில் விளையாடிய குழந்தை.. எதிர்பாராமல் நடந்த விபரீதம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்

சென்னை விருகம்பாக்கத்தில், வாளியில் இருந்த நீரில் மூழ்கி, ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம், குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு, ஒரு வயது ஆண் குழந்தை இருந்துள்ளது. வீட்டில் வாளியில் இருந்த தண்ணீரில், குழந்தை விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து சென்ற தாய், குழந்தை வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கி மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்