முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி.. கோவை மக்களுக்குநடிகர் சத்யராஜ் சொன்ன விஷயம்

x

வ.உ.சி மைதானத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், நடிகர் சத்தியராஜ் திறந்து வைத்தார். இதில் 300 க்கு மேற்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. 7ம் தேதி முதல் வருகின்ற 14ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ், திமுகவிற்காக ஸ்டாலின் உழைத்த உழைப்பு, கஷ்டங்கள் போன்றவற்றை பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார். கோவை மக்கள் அனைவரும் இந்த புகைபட கண்காட்சியை வந்து பார்க்க வேண்டும் என்றும், அப்போது தான், திராவிட மாடல் சித்தாந்தத்தின் நியாயத்தை புரிந்து கொள்ள முடியும் என்று சத்யராஜ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்