சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரிக்கை

x

மின் மயானங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையராக பதவியேற்றபின் கூட்டத்தில் பங்கேற்ற ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடையாறு காந்திநகர் கால்வாய் கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள பூங்காவுக்கு கலைஞர் மு.கருணாநிதி பூங்கா என பெயர் சூட்ட மன்றம் அனுமதி வழங்கியது. மாநகராட்சி பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு இசை கருவிகள் வாங்க 4.99 லட்சம் ரூபாய் ஒதுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய புகார்களுக்கு பதிலளித்த மேயர் பிரியா, மின் மயானங்கள் மற்றும் இடுகாட்டில், புகார் எண் மற்றும் கட்டணமில்லா சேவை என தெளிவாக பலகை வைக்க வேண்டும் என்றும், பொது மக்களிடம் கட்டணம் வசூலித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்