சென்னை பிராட்வே கட்டட விபத்து... "கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" - காவல் துறைக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை

x

சென்னை பிராட்வே கட்டடம் இடிந்த சம்பவம் குறித்து கட்டட உரிமையாளர்கள் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கட்டட பழுது பார்க்கும் பணிக்கு சென்னை மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாதது, பொதுமக்களுக்கு அபாயகரமான பாதிப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் பணியை மேற்கொண்டது போன்ற காரணங்களுக்காக, உரிய விளக்கத்தை உடனே அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விதி மீறல் காரணங்களுக்காக தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்