பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட விவகாரம், ஃப்ளிப்கார்ட் நிறுவன அதிகாரிடம் விசாரணை

x

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில், ஆசிட் விநியோகம் செய்த பிளிப்கார்ட் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, டெல்லியின் துவாரகா பகுதியில், பள்ளி மாணவி மீது, சச்சின் அரோரா, ஹர்ஷித் அகர்வால், விரேந்திர சிங் ஆகிய 3 பேர் கொண்ட கும்பல். ஆசிட் வீசியது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுமிக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் 3 பேரும் கைது செய்து விசாரணை நடத்தியதில், flipkart இணையதளம் மூலமாக, ஆன்லைனில் ஆசிட் பெற்றது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகளிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஊரு விளைவிக்கக் கூடிய ஆபத்தான பொருட்களை இணையதள வாயிலாக விற்பனை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆசிட் எவ்வாறு விநியோகம் செய்தது என போலீசார் கேட்டதாகவும், அதற்கு நிறுவன அதிகாரிகள் சார்பில் வழங்கப்பட்ட பதில் திருப்திகரமாக இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்